ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் சூறாவளி காரணமாக கடல் கொந்தளிப்பு நீடித்ததால், 1500 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டன. இதனால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.