தித்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை அனுமதி வழங்கவில்லை. தற்போது வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்துள்ளதால், 17 நாட்களுக்குப் பிறகு நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டாமல் இந்திய சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.