ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3.5 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேரை, திருக்கோவில் இணை ஆணையர் செல்லதுரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் பகுதி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.