ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், பக்தர்களை வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட பசுமை பந்தல், பலத்த காற்றால் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் நான்கு ரத வீதிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட இந்த பந்தல், தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.