ராமேஸ்வரம் ராமநாதபுரம் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா பிப். 8 முதல் பிப். 19 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. பிப். 8 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவில், பிப். 9 அன்று சாமி அம்பாள் தங்க கேடயத்திலும், பிப். 10 அன்று சாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளை கிளி வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்வுகளான மாசி மகா சிவராத்திரி பிப். 15 அன்றும், தேரோட்டம் பிப். 16 அன்றும் நடைபெறுகிறது.