ராமேஸ்வரம் கிழக்கு தெரு பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக சென்ற அப்பகுதி நபர்கள் மீது சிமெண்ட் கலவை பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, வடமாநில தொழிலாளர்கள் மற்றும் கட்டட உரிமையாளர் இணைந்து அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் இதே நபர் வடமாநிலத்தவர்களை தாக்கியதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.