தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலின் நடை இன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை அடைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் சாமி தரிசனம் செய்ய வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர். இந்த திடீர் அடைப்பால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.