இராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட சங்குமால் ஓலைகுடா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஆதி ஸ்ரீ கைலாயர் நடராஜர் கோயிலில், மூலவர் நடராஜருக்கு இன்று, பிப்ரவரி 17 அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.