ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறப்படும் வழக்கில் அக்டோபர் 9 ஆம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நவம்பர் 6 ஆம் தேதி இன்று இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது. தலா ரூ. 2.50 லட்சம் அபராதம் செலுத்தினால் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள், இல்லையென்றால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையுடன் இந்த விடுதலை வழங்கப்பட்டுள்ளது.