தஞ்சாவூர் - திருச்சி - ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி எழுத்துக்களில் மட்டுமே எழுதப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.