ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, பிப். 6 அன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழாவின் 3-ம் நாளான இன்று, பிப். 10 அன்று சுவாமி அம்பாள் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.