இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சி BSNL அலுவலகம் அருகேயுள்ள அம்பேத்கார் நகரில் முருகன் என்பவரின் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த முதுகுளத்தூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.