இராமநாதபுரம்: மீனவர் குறைதிர்ப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த கோரிக்கை

71பார்த்தது
இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, மீனவர் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது என்பதை நினைவூட்டி, உடனடியாக நடத்த ஆவன செய்ய கோரிக்கை வைத்தோம். மேலும் மீன்பிடித் தடைக்காலம் வரும் ஜூன் 15 அன்று முடிவடைக்கிறது. எனவே தடைக்காலம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகிறார்கள். மீனவர்களின் இன்றைய தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து மீனவர்களுக்கு தாங்கள் உதவி செய்ய மீனவர் குறைதீர்ப்பு கூட்டம் அவசியம். எனவே உடனடியாக நடத்த ஆவன செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தோம். மாவட்ட ஆட்சியர் அவர்களும் உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உடனடியாக மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.