ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. சமீபத்தில், சுற்றுலா வந்த ஒரு மூதாட்டியை மாடு முட்டியதில் அவர் காயமடைந்தார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், கடற்கரைப் பகுதியில் சுற்றித் தெரியும் மாடுகளை அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.