ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாத விநியோகத்தில் கடந்த 2023 முதல் தற்போது வரை 3 ஆண்டுகளில் சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.