ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாம்பன் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 65,190 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.