திருவாடானை அருகே ஆதியூர் கண்மாய் பகுதியில் நள்ளிரவில் டிப்பர் லாரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் கடத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.