பாம்பனில் கடல் 100 மீட்டர் உள் வாங்கியது

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரை துறைமுகத்தில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், காற்றின் வேகம் அதிகரிப்பால் கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனால் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரைதட்டி நிற்கின்றன. மீண்டும் மதியம் 12 மணிக்கு மேல் கடல் நீர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி