ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றத்தால், பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு மீன்பிடி படகுகள் சேதமடைந்தன. இதில் ஒரு ஃபைபர் படகு முற்றிலுமாக உடைந்து சேதமடைந்த நிலையில், அதன் இஞ்சின் கடலில் இழுத்துச் செல்லப்பட்டது. மற்றொரு நாட்டுப் படகு தரை தட்டி சேதமடைந்தது.