திடீரென ஏற்பட்ட கடல் நீரோட்டத்தின் வேகம் காரணமாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்கு அடியில் வாழும் தாவரங்களின் கடல்புற்கள் கரை ஒதுங்கின. இதனால் புனித நீராட வந்த பக்தர்கள் கடலில் இறங்க அச்சமடைந்தனர். இதன் காரணமாக கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.