ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலின் உபய கோவிலான ஸ்ரீ நம்பு நாயகியம்மன் ஆலயத்தில் இன்று பிப்ரவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றன. சுற்றுவட்டார பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு குங்குமம், பூ போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன.