கடந்த டிசம்பர் 30ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களின் வழக்கு இன்று 7வது முறையாக ஊர் காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு மீனவர்களை விடுதலை செய்து, படகு ஓட்டுனருக்கு 40 லட்சம் இலங்கை ரூபாய் அபராதம் விதித்து, இதனை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.