இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இராமேஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில், இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் நாசர்கான், கமுதி ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.