இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் தனியார் வேன் ஒன்று நிறுத்தப்பட்டதால் திடீரென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை நெடுஞ்சாலைகளில் நிறுத்துவதே இதற்குக் காரணம். இந்தச் சிக்கலை உடனடியாகச் சரிசெய்ய காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.