இராமேஸ்வரத்தில் கொலையான பள்ளி மாணவி ஷாலினியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, கொலை செய்தவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளுவும் நிகழ்ந்தது. இந்த மாணவி கொலை சம்பவம் தற்போது இராமேஸ்வரம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.