ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மண்டபம் ஒன்றியத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவில் கட்சி நிர்வாகிகள் அந்தோணி சபரி ராஜ், அந்தோணி லோபஸ், செபிலோன், வினோத்,
சூர்யா,
விஜய், சமய முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.