பாம்பன் பழைய ரயில் பாலம் அகற்றும் பணி தீவிரம்

468பார்த்தது
தமிழகத்தின் மண்டபம் நிலப்பரப்பையும் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் பாம்பன் பழைய ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) அகற்றும் பணிகள் தொடங்கின. 1914-ல் திறக்கப்பட்ட இந்தப் பாலம், கடலின் நடுவே அமைக்கப்பட்ட நாட்டின் முதல் பாலமாகும். கப்பல்கள் செல்வதற்காக நடுவில் தூக்குப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது இதன் சிறப்பம்சமாகும். 1964 புயலில் சேதமடைந்த இந்தப் பாலத்தை 4 மாதங்களில் அகற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி