ராமநாதபுரத்தில் அக்னி தீா்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோா் புனித நீராடினா்

70பார்த்தது
மார்கழி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர். அமாவாசை நாள்களில் பொதுமக்கள் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி வழிபடுவது வழக்கம். மார்கழி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். 

அக்னி தீர்த்தக் கடற்கரையில் அதிகாலை 5 மணி முதல் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கடலில் புனித நீராடினர். மேலும், ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். அமாவாசையையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சன்னிதியில் ஸ்படிக லிங்க பூஜை, கால பூஜை நடைபெற்றது. கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி