உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மீனவர் பேரவை ராமநாதபுரம் மாவட்ட தெற்கு சார்பாக மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து ஒப்பந்தம் செய்து, தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், 60 வயதை கடந்த மீனவர்களுக்கு மாநில அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.