திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலை பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!" என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. திருவாடானை மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபு தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை உரையாற்றினார். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பாஜகவின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பாஜக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.