தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக, ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் இடையே இயக்கப்படும் இரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை (பிப். 23) காலை 7:07 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் பாசஞ்சர் ரயில் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், திருச்சியிலிருந்து காலை 7:05 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.