திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அனுஞ்சை, வாஸ்து சாந்தி, பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.