திருவாடானை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்கனவே மறியல் மற்றும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்திய நிலையில், தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளர்களின் முக்கிய கோரிக்கையான காலமுறை ஊதியத்தை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.