ராமநாதபுரம்: கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு

58பார்த்தது
காளியம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்திற்கு உட்பட்ட நெருஞ்சிப்பட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் இடத்தினை நெடுங்காலமாக அந்த ஊரைச் சேர்ந்த போஸ், லெட்சுமணன், பாக்கியராஜ் மற்றும் நேரு ஆகிய நான்கு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் இடத்தினை மீட்டுத் தரும்படியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களிடம் நெருஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணகபாண்டி தலைமையில் கிராம மக்கள் புகார் அளித்தனர். அதுமட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டித்தரக் கோரியும் தங்கள் கிராமத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றினையும் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி