ராமேஸ்வரம் கார் பார்க்கிங் செல்லும் வழியில் ஜே ஜே நகர் அனுமன் கோவில் வாசலில் காவிரி குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால், குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி மலை வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் குடிநீர் வீணாக சாலையில் ஓடுவது மக்களுக்கு பெரும் வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.