
திருவாடானை அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் திருக்கோவிலில் புகழ்பெற்ற குண்டம் திருவிழா ஜூன் 14-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மாலையில் திருவிளக்கு பூஜையும், நள்ளிரவில் மயான பூஜையும் வெகுவிமரிசையாக நடைபெற்றன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.





















