508 திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் பங்கேற்பு

283பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த திருவடிமிதியூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 508 திருவிளக்கு பூஜை மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாலை வேளையில் நடைபெற்ற இந்த பூஜையில் திருவடிமிதியூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 508-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு, மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட திருவிளக்குகளுக்கு பூக்கள் தூவி, மந்திரங்கள் முழங்க பக்திப் பாடல்களைப் பாடி அம்மனை வழிபட்டனர்.