ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள சினேக வள்ளி அம்மன் உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அய்யனின் அருள் பெற்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.