ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா மே 21 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஏழாம் நாள் அன்று, பஞ்ச மூர்த்திகள், அதிகார நந்தி, மயில், மூஞ்சூறு, கேடகம், பல்லக்கு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் வீதி உலா வந்தார். இந்த திருவிழா வரலாற்றுச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.