ஆர். எஸ். மங்கலம் தாலுகா ஆயிங்குடி கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற பொது மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா ஆயிங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆயிங்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்து பிள்ளையார் கோவில் வரை தார் சாலை போடப்பட்டு 15 வருடங்களுக்கும் மேலாகிறது.
இது நாள்வரை சாலை சீரமைக்கப்படவே இல்லை என்றும் சுமார் 30 மீட்டர் தூரம் மட்டுமே சாலை சீரமைக்கப்பட்ட நிலையில் மற்ற இடங்கள் அனைத்தும் மண் சாலையாக மாறி மழை காலத்தில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலையில் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திடீரென உடல் நிலை சரியில்லாதவர்களை கட்டிலில் வைத்து தூக்கிச் சென்று சாலையில் வந்த பிறகு வாகனத்தில் அனுப்ப வேண்டிய அவல நிலை இருப்பதாகவும், பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு ஆடைகளில் சேற்று கரையுடன் செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.
இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் அடிக்கடி நடந்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவலை தெரிவித்தனர். துரித நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.