திருவாடானை பகுதியில் பல ஆண்டுகளாக வீணாகும் குடிநீர்

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் திருவொற்றியூர், ஓரியூர், அஞ்சுக்கோட்டை, மங்கலக்குடி, கற்காதக்குடி மற்றும் திருவாடானை பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருமளவில் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி