திருவாடானை: லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

451பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஊரணிக்கோட்டை கிராமத்தில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் ஓட்டிச் சென்ற வைக்கோல் ஏற்றிய லாரி, எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்தது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கம்பத்தில் மோதியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. லாரி டிரைவர் ராமலிங்கம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.