ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ள வி. கே. ராஜீவ், தனது சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், திருவாடானை அரசு மருத்துவமனையில் தனியாகப் பிரசவம் பார்க்கும் வகையில் பிரசவ வார்டு அமைக்கப்படும் என்றும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் முழுமையான மருத்துவ வசதிகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.