தொண்டி அருகே பதுங்கியிருந்த கொலைக் குற்றவாளி கைது

677பார்த்தது
தொண்டி அருகே தெற்கு தோப்பு காட்டுப்பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி அடையாள வேலு பதுங்கியிருந்ததாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தொண்டி காவல்துறையினர் அப்பகுதியை அதிரடியாகச் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். தப்பி ஓட முயன்ற அவரை லாவகமாகப் பிடித்த காவல்துறை, தீவிர விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த கைது நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி