நம்ம ஊரு மோடி பொங்கல்': விறுவிறுப்பாக நடைபெற்றது

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டியில், திருவாடானை மேற்கு ஒன்றிய பிஜேபி சார்பில் 'நம்ம ஊரு மோடி பொங்கல்' விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன் தலைமையில், தொண்டி - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்தப் பந்தயம் பெரிய மற்றும் சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தின் போது மாடுகள் இலக்கை நோக்கி ஒன்றை ஒன்று முந்திச் செல்லச் சீறிப்பாய்ந்தன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி