இராமநாதபுரம்: கொலை சம்பவத்தில் மேலும் ஒருவர் மீது வழக்கு

594பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை, படையாட்சி தெருவைச் சேர்ந்த மீனவர் நாகூர் செல்வம்(33) கடந்த 5ம் தேதி கடற்கரையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே அடையாள வேலு (25) கைது செய்யப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவரது சகோதரர் ராக்கப்பனுக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் ராக்கப்பன் மீது வழக்குப் பதிந்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி