திருவாடனை: மதுபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர்

0பார்த்தது
திருவாடனை: மதுபோதையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே, அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்றபோது, ஓட்டுநர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்து சரியில்லாமல் ஆபத்தான முறையில் ஓடியுள்ளது. இது குறித்து பயணிகள் விசாரித்தபோது, தற்காலிக ஓட்டுநர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.