இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

3374பார்த்தது
இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று (பிப்.21) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதையொட்டி தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதால், அப்பகுதியில் மீன்பிடித் தொழில் இன்று முழுமையாக முடங்கியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி