சிவகார்த்திகேயன் உடன் இணையும் ரம்யா நம்பீசன்

54பார்த்தது
சிவகார்த்திகேயன் உடன் இணையும் ரம்யா நம்பீசன்
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம், படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. இதில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து ரம்யா நம்பீசனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.