நிதேஷ் திவாரியின் 'ராமாயணம்' படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கும் நடிகர் ரன்பீர் கபூர், அயோத்தியில் ரூ.3.31 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கியுள்ளார். "அயோத்தி என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது, அந்த அழைப்பிற்குப் பதிலளித்துள்ளேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். புண்ணிய பூமியான அயோத்தியில் அவர் நிலம் வாங்கியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரையில் ராமராக நடிக்கும் போதே நிஜத்திலும் அங்கு நிலம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.